மட்டக்களப்பில் தொல்லியல் திணைக்கள பதாகைகள் அகற்றப்பட்ட விவகாரம் - மூவர் பிணையில் விடுவிப்பு
மட்டக்களப்பு - மண்முனை தென்மேற்கு பிரதேசசபைக்கு உட்பட்ட தாந்தமலை பகுதியில் நடப்பட்ட தொல்லியல் திணைக்கள பதாகைகளை அகற்றிய குற்றச்சாட்டின் கீழ் நேற்று கைது செய்யப்பட்ட பட்டிப்பளை பிரதேசசபை உறுப்பினர், தாந்தாமலை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர், பிரதேசசபை உத்தியோகத்தர் ஆகிய மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தாந்தமலை பகுதியில் நடப்பட்ட தொல்லியல் திணைக்கள பெயர் பலகைகளை அகற்றியதாக தெரிவிக்கப்பட்டு மூவர் சந்தேகத்தின் பேரில் நேற்றைய தினம் கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பிணையில் செல்ல அனுமதி
இந்த நிலையில் இன்றைய தினம் மூவரும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில், கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் முன்னிலைப்படுத்தப்பட்டுள்னர்.
இந்த வழக்கினை விசாரணை செய்த நீதிவான் நீதிமன்ற நீதிபதி அண்ணத்துரை தர்ஷினி, மூவரையும் தலா இருபத்தைந்து இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்வதற்கு அனுமதித்தார்.
இது தொடர்பான வழக்கானது எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


