ஹிட்லர் கால இனப்படுகொலையை சபையில் ஞாபகப்படுத்திய எதிர்க்கட்சி தலைவர்
இஸ்ரேல் - பலஸ்தீன நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். பலஸ்தீன மக்களுக்காக நாம் முன்னிற்கின்றோம்.
ஹிட்லர் காலத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையை நாம் ஞாபகப்படுத்த வேண்டும். ஆகவே அந்த நாடுகள் இரண்டு நாடுகள் என்ற தீர்வுக்கு வரவேண்டும்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
அந்த தீர்வினை நாம் வலியுறுத்துகின்றோம். 200ற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.இந்த படுகொலையை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்.
அதேபோல் பலஸ்தீன மக்களின் நடு தொடர்பிலான அவர்களது உரிமைக்காக நாம் முன்னிற்கின்றோம்.அவர்களின் பிரச்சினைக்கு இரு நாடுகள் தீர்வே சரியானதாக அமையும். பலஸ்தீனமும், இஸ்ரேலும் பிரிந்து செல்ல வேண்டும். இரு நாடுகளாக அவர்கள் இணைந்து வாழ வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.





புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
