ஆடையின்றி உந்துருளியில் பயணித்த மனிதனுக்கு விளக்கமறியல் நீடிப்பு
கொழும்பிலிருந்து கண்டிக்கு ஆடையின்றி உந்துருளியில் சென்றதற்காக கைது செய்யப்பட்ட நபர், இன்று(5) கண்டி நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், மார்ச் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விளக்கமறியல் நீடிப்பு
காரியவாசம் பதிரகே கவீச சம்சார காரியவாசம் என்ற அவர், அஹங்கம பகுதியில் உள்ள குருல்லவலவைச் சேர்ந்தவராவார்.
முன்னதாக, கடந்த திங்கட்கிழமையன்று அவர் முழு ஆடையின்றி உந்துருளியில் பயணித்த போது, கடுகன்னாவவில் வைத்து கைது செய்யப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்தநிலையில், சிறைச்சாலை அதிகாரிகள் மூலம் அவரை மனநல மருத்துவரிடம் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்புமாறும், அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதிபதி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிறுவயதில் முத்துவிற்கும், விஜயாவிற்கும் என்ன பிரச்சனை ஆனது?.. சிறகடிக்க ஆசை நடிகை அனிலா ஓபன் டாக் Cineulagam
