வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம்
குவைட்டில் கொலை செய்யப்பட்ட வீட்டுப் பணிப்பெண்ணின் சடலம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தப் பெண் கடந்த 2019ஆம் ஆண்டு குவைட்டுக்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம் திகதி இந்தப் பெண் கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்த வீட்டுப் பணிப் பெண் ஒருவரின் கத்தி குத்துக்கு இலக்காகியே இந்தப் பெண் உயிரிழந்துள்ளார் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மஹவ பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண்ணின் சடலம் நேற்றைய தினம் கட்டார் விமான சேவை நிறுவனத்தின் ஊடாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த மரணம் தொடர்பிலான பிரேதப் பரிசோதனை இன்று நடைபெறவுள்ளதாகவும் நேற்றைய தினம் நீதிமன்ற விசாரணை நடாத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கட்டுநாயக்க பொலிஸார் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
