சுவிற்சர்லாந்தின் இலங்கைக்கான தூதுவரை சந்தித்த ரெலோ பிரதிநிதிகள்
தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து கொள்ளும் சுவிற்சலாந்தின் இலங்கைக்கான தூதுவர் சிரி வால்ட்டை சுவிற்சர்லாந்து தூதரகத்தில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பிரதிநிதிகள் மரியாதை நிமித்தம் சந்தித்தனர்.
இச்சந்திப்பு, நேற்று (07.07.2026) இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆகிய செல்வம் அடைக்கலநாதன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதி தலைவரும் பேச்சாளரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வடமாகாண தேசிய அமைப்பாளருமான குருசுவாமி சுரேந்திரன் மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வவுனியா மாவட்ட இணைப்பாளருமான செந்தில்நாதன் மயூரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர் முயற்சிகள்
தூதுவரின் பதவி காலத்தில் தமிழ் தேசிய கட்சிகளை ஒன்றிணைப்பதற்கான தொடர் முயற்சிகளை மேற்கொண்டமைக்கு நன்றி கூறப்பட்டது.

தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளை சுவிற்சர்லாந்துக்கு அழைத்தும், தூதரகத்திற்கு அழைத்தும், நாடாளுமன்றத்திலும் மற்றும் அவர் மேற்கொண்ட வடக்கு கிழக்கு விஜயங்களின் பொழுதிலும் ஒற்றுமைப்படுத்துவதற்கான காத்திரமான முயற்சிகளை சிரி வால்ட் மேற்கொண்டு இருந்தார்.
இருப்பினும் துரதிஷ்டவசமாக அந்த ஒற்றுமை முயற்சி நிறைவேறாவிட்டாலும் கூட எதிர்காலங்களிலும் சுசிலாந்தின் தூதரகம் அந்த முயற்சியை தொடர வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்ததோடு அதற்கு தாம் பரிபூரண ஆதரவை வழங்க தயாராக இருப்பதாகவும் கட்சிப் பிரதிநிதிகள் தரப்பால் எடுத்துக் கூறப்பட்டது.
மேலும் தமிழ் மக்களின் இன நலன் சார்ந்த விடயங்களில் சுவிஸ் தூதரகமும் கடந்த கால தூதுவர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளை தமிழ் மக்கள் சார்பில் தாங்கள் வரவேற்பதாகவும் தொடர்ந்தும் இந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அம்மையாருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன் இச்சந்திப்பு நிறைவு பெற்றது.
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan