அன்று தமிழர்கள்!.... இன்று சிங்கள அதிகாரிகளை ஆடையின்றி படுகொலை செய்த வெறியர்கள்
இலங்கையில் அன்று அன்று ஆடைகள் அகற்றப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டு கொடூரமான முறையில் பல தமிழர்கள் சிறைச்சாலைக்குள் சிங்களவர்களால் கொல்லப்பட்டனர்.
ஆனால் இன்று சிங்களவர்களால், சிங்கள அதிகாரிகள் நிர்வாணமாக்கப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்ட பயங்கரமான சம்பவம் நேற்று(06.07.2026) பதிவாகி உள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் சிறைச்சாலை அதிகாரிகள் ஏழு பேர் உட்பட 26 பேர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளில், அணிவகுப்பு பயிற்சியின் பிரதான பயிற்றுவிப்பாளரான ஜெயிலர் சந்திரவன்ச, அவசர அதிரடிப் படையின் சிரேஷ்ட அதிகாரி புஷ்பகுமார மற்றும் அதிகாரிகள் அபேவர்தன, ஏ.டி. தரங்க, திலகசிறி மற்றும் தரங்க ஆகியோர் அடங்குவர்.
மனிதாபிமானமற்ற முறையில் தாக்கி கொலை
முந்தைய நாள் இரவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட அமைதியின்மை, மறுநாள் காலை உணவு வழங்கவும், கைதிகளை உறவினர்கள் சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய அதிகாரிகள் சிறை அறைகளுக்குள் சென்றபோது மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

அங்கு ஆக்ரோஷமடைந்த கைதிகள் குழுவினர், அதிகாரிகளை நிர்வாணப்படுத்தி, மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கி கொலை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
அதிகாரிகளிடம் இருந்த துப்பாக்கிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளையும் பறித்துக்கொண்ட கைதிகள், அவர்களை காப்பாற்ற வந்த ஏனைய அதிகாரிகளையும் தாக்கி, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்தனர்.
சிறைச்சாலை உடற்பயிற்சிக் கூடத்தில் இருந்த இரும்பு உபகரணங்களை உடைத்து, அவற்றை ஆயுதங்களாகப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளனர். நிலைமை மோசமடையவே, சிறைச்சாலை பிரதான அலுவலகம், மருந்தகம் மற்றும் ஆயுதக் களஞ்சியத்தை உடைத்து கட்டுப்பாட்டைக் கைப்பற்ற கைதிகள் முயற்சித்தனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படை
எனினும் முந்தைய தினமே அதிகாரிகள் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்த துப்பாக்கிகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியிருந்ததால், பெரும் அழிவு தவிர்க்கப்பட்டதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலையின் கட்டுப்பாடு முழுமையாகக் கைநழுவி சென்றது. இந்த நிலையில், நிலைமையைச் சமாளிக்க பொலிஸ் விசேட அதிரடிப்படை, கலவரத்தடுப்புப் பிரிவு, பொலிஸ் மற்றும் இராணுவம் பெருமளவில் வரவழைக்கப்பட்டன.
நீர்கொழும்பு, கம்பஹா மற்றும் சிலாபம் பொலிஸ் பிரிவுகளிலிருந்து சுமார் 500 மேலதிக பொலிஸாரும், 200 விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்புப் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டனர்.
பாதுகாப்புப் படையினர் சிறையைச் சூழ்ந்தபோது, கைதிகள் சுவர்களுக்கு மேலிருந்து ஓடுகள் மற்றும் இரும்பு குழாய்களைக் கொண்டு வெளியில் இருந்த அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர்.
பின்னர், விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் சிறைச்சாலையின் பிரதான கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து, துப்பாக்கிச் சூடு நடத்தி நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதன்போது ஏற்பட்ட மோதலில், சிறைச்சாலை அதிகாரிகள் 18 பேர், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் 8 பேர் மற்றும் 3 பொலிஸார் உட்பட பாதுகாப்புப் படையினர் பலர் காயமடைந்தனர்.
படுகாயமடைந்த விசேட அதிரடிப்படையின் நால்வர் உட்பட 14 பேர் உடனடியாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
You may Like this..
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam