மத ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்! சஜித் வலியுறுத்தல் (photos)
“இலங்கையில் இன, மத ரீதியில் எழுந்துள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும். அப்போதுதான் நாடு முன்னேற்றப் பாதையில் பயணிக்க முடியும். தீர்வு இல்லையேல் நாட்டுக்கு முன்னேற்றம் கிடையாது" என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அமைந்துள்ள ஸ்பெயின் தூதரகத்தின் அரசியல் விவகாரப் பிரிவின் தலைவர் அல்போன்சோ ஹெரெரோ கோரலுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் (31.03.2023) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மேலும், இரு தரப்பு ரீதியிலான முக்கிய விவகாரங்கள் குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
அரசியல் விவகாரப் பிரிவின் பிரச்சினைகளுக்கு தீர்வு
இக்கலந்துரையாடலில் எதிர்க்கட்சித் தலைவர் மேற்படி விடயத்தைத் தெரிவித்தார்.
ஸ்பெயின் தூதரகத்தின் அரசியல் விவகாரப் பிரிவின் தலைவர், பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தின் கருத்தை ஸ்பெயின் தூதரகம் வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.



புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
