மன்னாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைள் முன்னெடுப்பு
மன்னார் மாவட்டத்தில் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனின் பணிப்புரைக்கமைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தலைமன்னார் தொடக்கம் மன்னார் நகர பகுதி வரையிலான பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு மற்றும் மடு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த நிவாரண பொதியின் அத்தியாவசிய பொருட்கள் உள்ளடங்களாக வழங்கி வைக்கப்பட்டு வருவதோடு, தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் சமைத்த உணவு மற்றும் ஏனைய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த இரு தினங்களாக பெய்த மழையை அடுத்து குளங்கள் பெருக் கெடுத்ததால் மன்னார் மாவட்டம் கடும் பாதிப்புக்களை சந்தித்தது. இந்த நிலையில் பல கிராமங்களுக்கான போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டதால் மக்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.
இந்த நிலையில் இம்மக்களுக்கு தேவையான சமைத்த உணவுகள் மற்றும் ஏனைய பொருட்களை அவர்களை சென்றடையும் வகையில் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் வழிகாட்டலில் சமாதான தூதரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான ஷேக் அமானி ஊடாக வழங்கி வைக்கப் படுகின்றது.
மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழை, புயல் காரணமாக பாதிக்கப்பட்டு மீட்கப்பட்ட கூராய் பகுதி மக்கள் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரில் உள்ள கள்ளியடி பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் மற்றும் கிராம அலுவல் குறித்த மக்கள் தங்கியுள்ள பாடசாலையில் இருந்து தேவையான உதவிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செய்தி - எரிமலை
இடைத்தங்கல் முகாம்
குறித்த மக்களின் அவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் (மெசிடோ) தலைவர் ஜாட்சன் பிகிராடோ தலைமையிலான குழுவினர் நேற்றைய தினம் (1) குறித்த பாடசாலையில் தங்கியுள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடியதோடு, அவர்களுக்கு தேவையான முதல் கட்ட நிவாரண பணியை முன்னெடுத்துள்ளனர்.

குறிப்பாக குடிநீர், ஆண்கள், பெண்களுக்கான ஆடைகள் உள்ளடங்களாக நிவாரண பொருட்களை முதல் கட்டமாக வழங்கி வைத்துள்ளனர்.
கூராய் பகுதி மக்கள் பாரிய வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு கிராமத்தில் இருந்து வெளிவர முடியாத நிலையில் காணப்பட்ட நிலையில் கடற்படையினரின் உதவியுடன் குறித்த மக்கள் மீட்கப்பட்டு அமைக்கப்பட்ட நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் அழகே அழகு தொடர்... புத்தம் புதிய சீரியல், யார் யார் நடிக்கிறார்கள் பாருங்க Cineulagam
சவுதி அரேபியாவை அடுத்து... பல மில்லியன் டன் தங்க இருப்பைக் கண்டுபிடித்த மத்திய கிழக்கு நாடு News Lankasri