எல் - நினோ காலநிலை மாற்றம்! மக்கள் தொழில்களை இழக்கும் அபாயம் - அமைச்சர் தலைமையில் விசேட கவனம்
எல் - நினோ காலநிலை மாற்றத்தினால் தொழில்களை இழக்கும் அபாயத்திலுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தி தலைமையிலான விசேட அமைச்சரவை உபகுழுவின் 4ஆவது கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜனாதிபதி செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், எல் - நினோவினால் காய்கறி மற்றும் பழச் செய்கைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்து, நாட்டில் காய்கறித் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்கும் வழிமுறைகள் குறித்து ஆராயப்பட்டது.
குடிநீர் விநியோகத் திட்டங்களின் முன்னேற்றம் மீளாய்வு
அத்துடன் இதுவரை பாதிப்புக்குள்ளாகியுள்ள 6 மாவட்ட மக்களுக்கான தடையற்ற குடிநீர் விநியோகத் திட்டங்களின் முன்னேற்றம் மீளாய்வு செய்யப்பட்டது.

எனவே பெரும்போகம் தொடர்பில் தெளிவுபடுத்த நாளைய தினம் (04.09.2026) ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் மற்றும் செயலாளர்களுடன் 'சூம்' வழியே கலந்துரையாடல் மேற்கொள்ளப்படும்.
எனவே அமைச்சரவை உபகுழுவின் அடுத்த கூட்டம் செப்டம்பர் 14ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 18
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமும் அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடும்..! 21 மணி நேரம் முன்
ஜெயிலர் 2 ரிலீஸ் தள்ளிப்போகிறதா? சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அறிவிப்பு.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி Cineulagam
குழந்தைக்கு ஒரு வயது கூட ஆகல... பிக் பாஸ் சீசன் 10-ல் ஜாய் கிரிஸில்டா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள் Manithan