கொழும்பை உலுக்கிய மரணம் - அம்பலமான திட்டங்கள்
நாட்டில் அண்மை காலமான அரசியல் தரப்பில் பல முக்கிய புள்ளிகள் தொடர்ச்சியாக உயிரிழந்து வருகின்ற நிலையில், அம்பாந்தோட்டையின் முன்னாள் நகரபிதா எராஜ் பெர்னாண்டோ மர்மமான முறையில் உயிரிழந்துள்ளமை மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர் தவறான முடிவின் காரணமாகவே உயிரிழந்துள்ளார் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த உயிரிழப்பின் பின்னணி என்ன என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவர் சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (UPFA) ஆகியவற்றின் கீழ் அம்பாந்தோட்டை மாநகர சபையின் மேயராக (நகரபிதா) பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது நாட்டில் அரசியல் தரப்பில் பல முக்கிய நபர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படுவதும் அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படும் பொழுது இவ்வாறான மரணங்கள் நிகழ்வதும் வழமையான விடயமாக மாறியுள்ளது.
இவ்வாறான நிலையில் இவருடைய மரணத்திற்கு பின்னணியிலும் ஏதாவது அரசியல் காரணங்கள் காணப்படலாம் என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் தற்பொழுது எழுந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக இன்னும் சில அதிர்ச்சி ஊட்டும் தகவல்களை லங்காசிறியின் நாட்டு நடப்பு நிகழ்ச்சியின் ஊடாக விரிவாகப் பார்க்கலாம்..
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமும் அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடும்..! 15 மணி நேரம் முன்
19 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வநாத் & சன்ஸ்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் Cineulagam