2 மில்லியன் குடும்பங்களுக்கு ஜனாதிபதி ரணில் வழங்கியுள்ள திட்டம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய சமுர்த்தி பயனாளர்கள் உட்பட குறைந்த வருமானம் பெறும் 02 மில்லியன் குடும்பங்களுக்கு 02 மாத காலத்திற்கு 10 கிலோ அரிசி வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி 40,000 மெற்றிக் தொன் அரிசி தேவைப்படுவதாகவும், அதற்காக 61,600 மெற்றிக் தொன் அரிசியை அரசாங்கம் கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டங்கள் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களின் உதவியுடன் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! பின்னணியில் மறைந்துள்ள முக்கிய சூத்திரதாரிகள் உள்ளிட்ட சதியாளர்களின் பட்டியல்
அடுத்த 24 மணி நேரத்திற்குள் தீவிரமடையும் வானிலை: பல பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!