அரசியல் கைதி சிவசுப்பிரமணியம் தில்லைராஜ் விடுதலை
அரசியல் கைதி சிவசுப்பிரமணியம் தில்லைராஜ் 12 வருடங்களாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றங்கள் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் மேல் நீதிமன்றத்தினால் இன்று (26.01.2023) இவர் குற்றமற்றவர் என கருதி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு யாழ்பாணத்தில் மானிப்பாய் பகுதியில் தில்லைராஜாவுக்கு சொந்தமான மரக்காலை ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்ட தில்லைராஜ் கடந்த 12 வருடங்களாக அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
குற்றமற்றவர் என்ற அடிப்படையில் விடுதலை
இந்த நிலையில் இன்று (26.01.2023) குறித்த வழக்கு மன்னார் மேல்நீதி மன்றத்துக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி தில்லைராஜ் குற்றமற்றவர் என்ற அடிப்படையில் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
விடுதலையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தில்லைராஜ்,
12 வருடங்களின் பின் தான் குற்றமற்றவன் என நிருபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளேன்.
சிறைப்பட்டுள்ள அரசியல் கைதிகள்
எனக்காகவும் என் விடுதலைக்காகவும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் தொடர்சியாக முன்னிலைகிய சிரேஸ்ர சட்டத்தரணி ரட்ணவேலுக்கும், அவரது உதவியாளர் தாயளனுக்கும், அதே போன்று யாழ். மாவட்டத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற வழக்கில் என் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிக்கு நன்றிகள்.
நான் எந்த குற்றச்சாட்டுகளும் இன்றி 12 வருடம் சிறையில் இருந்து விடுதலையாகி இருக்கின்றேன்.
இந்நிலையில் என்னை போன்று இன்னும் 25 வருடங்களுக்கு மேலாக அரசியல் கைதிகளாக சிறைகளில் எங்களுடம் ஒன்றாக இருந்த பலர் சிறைப்பட்டு இருக்கின்றார்கள்.
அவர்களையும் விரைவில் விடுதலை செய்து தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஜீ தமிழின் புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள சன் டிவி ஆடுகளம் சீரியல் நடிகரின் மனைவி.. விஜய் டிவி சீரியல் நாயகியா? Cineulagam
