இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழித்தாலே அரசியல் கைதிகளின் விடுதலை உறுதிப்படுத்தப்படும் : அருட்தந்தை மா.சத்திவேல்

Srilanka America Army Discussion
By Independent Writer Dec 23, 2021 09:55 AM GMT
Report

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாமல் ஒழித்தாலே அரசியல் கைதிகளின் விடுதலை உறுதிப்படுத்தப்படும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு உலக நாடுகளும் முன்வர வேண்டும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்ரனி ஜே.பிளிங்கென் வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

"சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு உலக நாடுகள் முன்வர வேண்டும்" என அமெரிக்க வெளி விவகார அமைச்சுடன் இணைந்து அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அரசியல் கைதிகள் தொடர்பான கலந்துரையாடல் ஒழுங்கு செய்திருந்தது.

அதில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்ரனி ஜே.பிளிங்கென் கோரிக்கை விடுத்துள்ளதோடு அவர்களது அடையாளத்திற்கான இலக்கை வைத்து சித்திரவதை செய்யப்படுகிறார்கள் எனும் உண்மையை வெளியில் வெளிப்படுத்தியுள்ளார்.

இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளமையை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வரவேற்பதோடு இது வெறும் கோரிக்கையாகவோ, அரசியல் வாண வேடிக்கையாகவோ மட்டும் அமைந்து விடக்கூடாது என்பதையும் வலியுறுத்துகிறது.

அதேநேரம் அரசியல் கைதிகளாகச் சிறைகளில் வாடுவோர் தாம் நேசிக்கும் மக்களின் விடுதலைக்காக ஒடுக்கு முறை ஆட்சியாளர்களுக்கு எதிராகவும், அவர்களினால் பயங்கரவாதத்திற்கு எதிராகவும் செயல்பட்டவர்கள் என்பதையும் அமெரிக்கா நேர்மையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அதனை பயங்கரவாத ஆட்சியாளர்களுக்கு வெளிப்படுத்தி அவர்களுக்காக இராணுவ மற்றும் ஆயுத தளபாட ஒத்துழைப்புகளையும் அமெரிக்கா உட்பட அவர்களின் நேச நாடுகள் நிறுத்த வேண்டும். மேலும் சுயநிர்ணய உரிமைக்காகவும், தேச விடுதலைக்காகவும் செயல்படுபவர்களை, போராடுபவர்களைப் பயங்கரவாத பட்டியலில் சேர்த்து ஒடுக்கும் அமெரிக்கா உட்பட அதன் நேச நாடுகள் தவிர்க்க வேண்டும்.

ஒடுக்கப்படுபவர்களுக்கு ஆதரவு வழங்குவதையும் நிறுத்த வேண்டும். அதுமட்டுமல்ல இலங்கை உட்படப் பல நாடுகள் அரசியல் ஒடுக்கு முறையாகவும், இனவாத ,மதவாத இன அழிப்பிற்காகவும் அரசியல் கைதிகள் இருக்கின்றார்கள் என்பதை ஏற்றுக்கொள்வதில்லை. இது அடிப்படை உரிமைகளை மீறுகின்ற செயலாகும். இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாகச் சர்வதேசத்திற்கு உறுதியளித்து அதனை இது கால வரை செய்யவில்லை.

புதிய சட்டம் கொண்டு வருவதாகவும் இல்லை. திருத்தங்களைச் செய்வதாகக் கூறி அதனையும் மேற்கொள்ளவில்லை. இது சர்வதேசத்தை ஏமாற்றும் செயல் மட்டுமல்ல பயங்கரவாத செயலுமாகும்.இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இல்லாமல் ஒழித்தாலே அரசியல் கைதிகளின் விடுதலை உறுதிப்படுத்தப்படும்.

அரசியல் கைதிகளின் விடுதலை என்பது தனியே கைதிகள் சம்பந்தப்பட்ட விடயம் மட்டுமல்ல. அவர்கள் சார்ந்த அமைப்பின் அரசியல் கொள்கை சார்ந்த விடயமாகும். அத்தகைய அரசியல் கொள்கை சுதந்திரத்திற்கும் தேசவிடுதலை செயற்பாட்டுக்கும், கருத்துச் சுதந்திரத்திற்கும் அமெரிக்கா உட்பட வல்லரசு நாடுகள் ஆதரவு வழங்க வேண்டும்.

தமது அரசியல் நலனுக்காக ஒடுக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதைத் தடுத்தால் மட்டுமே விடுதலை செயற்பாடு கௌரவத்திற்குரியதாகும். அத்தோடு சுதந்திர கலந்துரையாடலுக்கும் வழி வழிவகை உருவாக்கப்படுதலையும் உறுதி செய்யவேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US