சுங்கத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள வாகனங்களை விடுவிப்பது தொடர்பில் வெளியான தகவல்
நாட்டில் நாணயக் கடிதங்களை திறந்து உற்பத்தி செய்யப்பட்ட நாடு அல்லாத வேறு நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதால், இலங்கை சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுவிக்க முடியும் என்று இலங்கை சுங்கம் அறிவித்துள்ளது.
இலங்கை சுங்கம் இன்று (16) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இந்த விடயத்தை அறிவித்துள்ளது.
இலங்கை சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிக்க உத்தரவிடக் கோரி வாகன இறக்குமதியாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட சுமார் 15 அடிப்படை உரிமை மனுக்கள் இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் அமர்வு முன் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
நிறுவனத்தின் உத்தரவாதம்
இதன்போது இலங்கை சுங்கம் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன, இந்த வழக்குகளுக்கு உட்பட்ட, இலங்கை சுங்கத்தால் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை, நிறுவனத்தின் உத்தரவாதம் அல்லது தனிப்பட்ட உத்தரவாதத்தை சமர்ப்பித்த பிறகு இறக்குமதியாளர்களால் விடுவிக்க முடியும் என்று நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
அதற்கு மேலதிகமாக இலங்கை சுங்கத்திற்கு செலுத்த வேண்டிய மேலதிக கட்டணங்களை செலுத்திய பிறகு தொடர்புடைய வாகனங்களை பதிவு செய்ய அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில் மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, இதே போன்று இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் கடந்த காலங்களில் இலங்கை சுங்கத்தால் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் சுங்கம் எவ்வாறு இதுபோன்று செயல்படுகிறது என்றும் கேள்வி எழுப்பினார்.
வாகனங்களின் பட்டியல்
அவ்வாறு விடுவிக்கப்பட்ட வாகனங்களின் பட்டியலை நீதிமன்றத்திற்கு அறியப்படுத்துவதற்கான கட்டளை பிறப்பிக்குமாறும் அவர் நீதிமன்றத்தை வலியுறுத்தினார்.
மனுதாரர்கள் இந்த வழக்கில் வெற்றி பெற்றால், இறக்குமதியாளர்கள் இந்த வாகனங்களை மீட்டெடுக்கும்போது செலுத்த வேண்டிய 35 சதவீத மேலதிக கட்டணத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா சுட்டிக்காட்டினார்.
அதன்படி, குறித்து மனுக்கள் தொடர்பாக தீர்மானிப்பதற்காக எதிர்வரும் 22 ஆம் திகதி வழக்கை மீண்டும் அழைப்பதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
