ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் மேலும் இரு தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொது மன்னிப்பின் கீழ் மேலும் இரு தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதாகி, ஆயுள் தண்டனை பெற்று 15 வருடங்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாவகச்சேரி - மிருசுவிலைச் சேர்ந்த சண்முகரட்ணம் சண்முகராஜன் (16 வருடம்), 200 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கிளிநொச்சியைச் சேர்ந்த செல்லையா நவட்ணம் (14 வருடம்) ஆகியோரே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அரசியல் கைதிகள் விடுதலை
இந்த நிலையில் தொடர்ச்சியாக விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகள் தவிர்த்து இன்னும் சிறைகளில் 17 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், இலங்கை அரசாங்கத்தினால் முதற்கட்டமாக விடுவிக்கப்பட்ட 5 பேருக்கும், இரண்டாம் கட்டமாக விடுவிக்கப்பட்ட 10 பேருக்கும், 3 ஆம் கட்டமாக விடுவிக்கப்பட்ட 13 பேருமாக 28 அரசியல் கைதிகளுக்கும் தலா 25 இலட்சம் – (7கோடி ரூபாய்) லைக்கா ஞானம் அறக்கட்டளையின் ஊடாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ட்ரம்பால் அறிவிக்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போர்நிறுத்தம்: பிரதமரிடம் விளக்கம் கேட்கும் எதிர்க்கட்சிகள் News Lankasri
