புதிய சுகாதார வழிகாட்டல்கள் இன்று வெளியீடு
இலங்கையில் அமுலாகும் புதிய சுகாதார வழிகாட்டல்கள், சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய , நவம்பர் 16 ஆம் முதல் சாதாரண தர, உயர்தர பிரத்தியேக வகுப்புகளை 50% திறனில் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
1/3 பங்கினருடன் கூட்டங்களை முன்னெடுக்கலாம். ஒரு நேரத்தில் உணவு விடுதிகளுக்குள் அதிகபட்சமாக 75 பேரும், வெளியே 100 பேரும் உணவருந்த அனுமதிக்கப்படுவார்கள்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வழங்கிய தொடர் அறிவுறுத்தல்களின்படி, கண்காட்சிகள் மற்றும் மாநாடுகள் எதிர்வரும் முதலாம் திகதி முதல் அனுமதிக்கப்படும்.
திருமணங்கள், இறுதிச் சடங்குகள் மற்றும் மதச் சடங்குகள் போன்றவைகளில் முன்னர் அறிவிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு அமையவே செயற்பட வேண்டும்.
மாகாணங்களுக்கு இடையில் நீண்ட நாட்களாக இருந்து வந்த போக்குவரத்து தடை எதிர்வரும் முதலாம் திகதியுடன் முழுமையாக நீக்கப்படவுள்ளது. இதனையடுத்து நாடு வழமை நிலைமைக்கு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri