25 வருட போராட்டத்தின் பின்னர் காணி உரிமத்திற்கான பெயர் விவரம் வெளியீடு!
25 வருட போராட்டத்தின் பின்னர் வவுனியா, பண்டாரிகுளம் பகுதியில் காணி உரிமத்திற்கான பெயர் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் வசிக்கும் 83 குடும்பங்களுக்கான காணி உரித்துக்கான பத்திரங்கள் கிடைக்கப் பெறாத நிலையில் 25 வருடங்களாக அவற்றை பெறுவதற்கு காணி உரிமையாளர்கள் பல்வேறு தரப்பினர்களுடன் முயற்சிகளை மேற்கொண்டு வந்திருந்தனர்.
இந்தநிலையில், இன்றைய தினம் (24.02) குறித்த காணி உரிமையாளர்களுக்கான பத்திரங்களை வழங்குவதற்கான பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியல் பிரதேச செயலத்திற்கு கிடைக்கப்பெற்று இருப்பதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
காணி உரிமம்
இதன் காரணமாக 25 வருடமாக தமது காணிக்கான உரிமையை பெறுவதற்காக போராடியதன் பலனை அடைந்திருப்பதாகவும் மக்கள் கூறியுள்ளனர்.

குறித்த காணிக்கான உரிமையை பெறுவதற்கு எந்த அரசியல்வாதிகளும் தமக்கு துணையாக இருக்கவில்லை எனவும் பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 23 மணி நேரம் முன்
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri