கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்(VIDEO)
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கவனயீர்ப்பு போராட்டம்
குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது அலுவலகம் முன்பாக இடம்பெற்றுள்ளது.
இதன்போது, வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிற்கு சர்வதேசம் நீதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கோரிக்கைகள்
சிறுவர் தினமான இன்றைய தினம் இடம்பெற்ற போராட்டத்தில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது உறவினர்களான சிறுவர்களும் கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
குடும்பமாக கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு என்ன நடந்தது உள்ளிட்ட விடயங்களில் சர்வதேசம் நீதியான விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும், கால நீடிப்பினை வழங்கக் கூடாது எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 1 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
