வடக்கில் கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்பு துண்டிப்பு
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
மின் இணைப்பு துண்டிப்பு
கிளிநொச்சி,முல்லைத்தீவு மின் பொறியியலாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 4000 ரூபாவுக்கு மேல் மின் கட்டணம் செலுத்தாமலுள்ள அனைவரது மின் இணைப்புக்களும் துண்டிக்கப்பட்டு வருகிறது என மின் பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
குறித்த மாவட்டங்களில் தங்களது மின் கட்டணம் 4000 ரூபாவுக்கு மேல் உள்ள மின் பாவனையாளர் உடனடியாக கட்டணத்தை செலுத்தி மின் துண்டிப்பை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலதிக கட்டணம் 3000 ரூபா
கட்டணம் செலுத்தாத நிலையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் செலுத்த
வேண்டிய மின் கட்டணப் பட்டியலின் முழுத் தொகையினையும் செலுத்துவதுடன், மீள
இணைப்பதற்கான மேலதிக கட்டணம் 3000 ரூபாவும் செலுத்த வேண்டும் என
கிளிநொச்சி,முல்லைத்தீவு மின் பொறியியலாளர் அலுவலகம் பொது மக்களை
கேட்டுக்கொண்டுள்ளது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 13 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
