60 வயது முதியவரை வீதியில் கைவிட்டுச் சென்ற உறவினர்கள்
60 வயதான முதியவரை சிலர் பாணந்துறை மாமுல்ல வீதி, தெல்கஸ்ஹந்திய பிரதேசத்தில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் கைவிட்டுச் சென்றுள்ளனர்.
தான் பாணந்துறை தர்மாராம பிரதேசத்தில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் வசித்து வந்ததாக பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ள இந்த முதியவர் தெரிவித்துள்ளார்.
உடல் நலம் மோசமடைந்த பின்னர், உறவினர்கள் தன்னை சரியாக கவனித்துக்கொள்ளவில்லை எனவும் நிமல் ரணசிங்க என்ற இந்த முதியவர் கூறியுள்ளார்.
தங்கையும், தங்கையின் மகனும் தன்னை வீதியில் கைவிட்டுச் சென்றனர் எனவும் தனது மகன் ஒருவர் பதுளையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது நண்பர் ஒருவர் வழங்கிய சாக்கு கட்டிலில் படுத்தவாறு வீதியில் வாழ்க்கையை கழித்து வருவதாக அந்த முதியவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்படியான உதவியற்ற மனிதர்கள் குறித்து சமூகத்தில் உள்ள அனைவரும் நன்றாக உணர்ந்தும் தமது கடமைகளை செய்ய வேண்டியது கட்டாயம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
