இலங்கை சிங்கப்பூராக மாற இந்தியாவுடனான உறவு மிக அவசியம்! மிலிந்த மொரகொட
இலங்கை தெற்காசியாவின் ஒரு தளவாட மையமாக உருவெடுக்க வேண்டுமாயின், இந்தியாவுடனான உறவை மிகத்தெளிவான மூலோபாயத்துடன் கையாள வேண்டும்" என்று முன்னாள் அமைச்சரும் இராஜதந்திரியுமான மிலிந்த மொரகொட தெரிவித்தார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய ஆய்வு அறிக்கையிலேயே அவர் இதனை வலியுறுத்தினார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நெதர்லாந்து ஐரோப்பாவின் மையமாகவும், சிங்கப்பூர் தென்கிழக்கு ஆசியாவின் நுழைவாயிலாகவும் வளர்ந்தமையை அவர் சுட்டிக்காட்டி இலங்கை அத்தகைய வாய்ப்புகளை இதுவரை பயன்படுத்தத் தவறியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
உள்நாட்டு அரசியல்
உள்நாட்டு அரசியல் மற்றும் வெளிநாட்டு ஈடுபாடுகள் குறித்த தேவையற்ற அச்சமே இதற்குக் காரணம் என்றும் அவர் சாடினார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், "இலங்கையின் வடமேற்கில் உள்ள 15 ஆயிரம் மெகாவாட் காற்றாலை மின்சக்தி ஆற்றலைப் பயன்படுத்தி, இந்தியாவுக்கு மின்சாரத்தை ஏற்றுமதி செய்வது நாட்டின் பொருளாதாரத்தை முற்றாக மாற்றியமைக்கும்.

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்து, இலங்கையைப் பிராந்திய எரிசக்தி மையமாக மாற்றுவது நீண்டகால மூலோபாயத் தேவையாகும்.
கொழும்பு துறைமுக வர்த்தகத்தில் 50 சதவீத இந்தியாவுடன் தொடர்புடையது. இந்தியா தனது சொந்த துறைமுகங்களை விரிவுபடுத்துவதால், இலங்கை தனது போட்டித்தன்மையைத் தக்கவைக்க வடக்கு துறைமுக விரிவாக்கத் திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும்.
பொருளாதார வளர்ச்சி
இந்திய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் இலங்கையை ஒரு 'புதிய கோவா' போன்று மாற்றியமைக்க வேண்டும். இந்தியா மற்றும் ஜப்பான் பங்களிப்புடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை நவீனப்படுத்த வேண்டும்.
1998 சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மற்றும் 2003 திருகோணமலை எண்ணெய் தாங்கித் திட்டங்களில் ஏற்பட்ட தாமதங்கள், மற்றும் சம்பூர், மன்னார் காற்றாலைத் திட்டங்கள் இரத்துச் செய்யப்பட்டமை ஆகியவை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருந்தது.

இலங்கை சிறிய நாடு என்ற தயக்கத்தைக் கைவிட்டு இந்தியாவை ஒரு வாய்ப்பாகக் கருத வேண்டும். அதேநேரம், இந்தியா ஒரு பெரிய நாடு என்ற வகையில் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்தி, இலங்கையின் தேவைகளுக்கு அதிக உணர்திறனுடன் செயற்பட வேண்டும்.
இந்த அச்சங்களைக் கடந்தால் மட்டுமே இலங்கை தெற்காசியாவின் சிங்கப்பூராகவோ அல்லது நெதர்லாந்தாகவோ மாற முடியும்." - என்று மிலிந்த மொரகொட மேலும் தெரிவித்தார்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 2 மணி நேரம் முன்
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam