கோவிட்டினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வது தொடர்பான வழிகாட்டுதல் கொண்ட சுற்றறிக்கை
கோவிட்டினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வது தொடர்பான வழிகாட்டுதல்களை கொண்ட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி இறந்தவரின் உறவினர்கள் சடலத்தை தாமதமின்றி அடக்கம் செய்ய விரும்புவதாக சுகாதார நிறுவனத்தின் இயக்குநருக்கு அல்லது தலைவருக்கு மரணம் நடந்த இடத்தில் தெரிவிக்க வேண்டும்.
மருத்துவமனையின் இயக்குநர் அல்லது சுகாதார நிறுவனத்தின் தலைவர் அடக்கம் செய்ய உறவினர்களிடமிருந்து எழுத்துபூர்வ கோரிக்கையை பெற வேண்டும்.
உறவினர்கள் முன்கூட்டியே ஒரு சவப்பெட்டியை வழங்க வேண்டும். இதனையடுத்து தடயவியல் மருத்துவம் மற்றும் நச்சுயியல் நிறுவனத்துக்கு, உறவினர்கள் வழங்கிய சவப்பெட்டியில் வைத்து சடலத்தை கொண்டு செல்வது இயக்குநரின் அல்லது சுகாதார நிறுவனத்தின் தலைவரால் நியமிக்கப்பட்ட அதிகாரியின் கடமையாகும்.
அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் எடுத்து செல்லப்பட்ட சடலம் நாச்சிகுடாவில் ஒப்படைக்கப்படும், மருத்துவமனையில் மட்டுமே மத நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும்.
இரண்டு உறவினர்கள் மட்டுமே அடக்கம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
