புதிய ஜனாதிபதி தெரிவின் முடிவு இதுவே! த.தே.கூட்டமைப்பு அமைச்சு பதவிகளை ஏற்காது - சீ.வி.கே. சிவஞானம்
அரசாங்கத்தோடு பங்காளியாக செயற்படும் தமிழ் அரசியல் கட்சிகள் இலங்கையில் எந்த காலத்திலும் அமைச்சு பதவிகளை பெறும் வாய்ப்பு இல்லை என வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் தமிழ் அரசியல் தலைமைகள் பதவிகளை பெறும் சந்தர்ப்பம் இல்லையென்றும், ரணில் தலைமையிலான அரசாங்கம் தமிழ்க்கட்சிகளை அழைக்காவிட்டால் தானாகவே சென்று கலந்துரையாடும் நிலையில் தமிழ் தலைமைகள் இல்லையெனவும் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் சஜித் தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் தமிழ் தலைமைகளுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல விடயங்களை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,



