முன்னாள் தேசிய கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனாநாயக்க தாக்கல் செய்த மனு நிராகரிப்பு
கடந்த ஆண்டு லங்கா பிரீமியர் லீக்கில் ஆட்ட நிர்ணயம் செய்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக தாம் கைது செய்யப்படுவதை தடுக்க முன்னாள் தேசிய கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனாநாயக்க தாக்கல் செய்த முன் பிணை மனுவை கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
இந்த மனு, கொழும்பு மேலதிக நீதிவான் காஞ்சன நிரஞ்சன சில்வா முன்னால் விசாரணைக்கு வந்தது.எனினும் சமர்ப்பிக்கப்பட்ட மனுவில் உரிய நடைமுறைகள் பூர்த்தி செய்யவில்லை என்பதால் நீதிவான் மனுவை நிராகரித்தார்.
விளையாட்டுச் சட்டம் தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்காக 2019 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்கத்தின் கீழ் விளையாட்டுத்துறை அமைச்சு இந்த மனுவைத் தாக்கல் செய்தது.
இந்தச் சட்டத்தின் கீழ் நீதவான் நீதிமன்றத்தில் யாராவது குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 500,000ரூபா அபராதம் மற்றும் 10 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்படும்.
இதேவேளை, விசாரணை முடியும் வரை சேனாநாயக்க கிரிக்கட் அணியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.





கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
