இரணைமடுக்குளத்தின் இடது கரை நீர் விநியோக வாய்க்கால் சீரமைப்பு பணிகள் ஆரம்பம்
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் இடது கரை நீர் விநியோக வாய்க்கால் சீரமைப்பு
பணிகள் 35 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர் பாசன குளமான இரணை மடு குளத்தின் முரசுமோட்டை, ஊரியான், உருத்திரபுரம், பெரிய பரந்தன் அகிய பிரதேசங்களுக்கான இடது கரை நீர் வினியோக வாய்க்காலின் நீர் திறந்து விடப்படும் துலுசுப் பகுதியல் ஏற்பட்டிருந்த நீர்க்கசிவினைத் தடுக்கும் வகையிலான சீரமைப்பு பணிகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் கட்டுமான பணிகள் மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் 35 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீர் பாசன பொறியியலாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சிறுபோக அறுவடை
கடந்த சிறுபோக செய்கை அறுவடையின் பின்னர் குளத்தினுடைய குறித்த புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி திருவையாறு ஏற்று நீர் பாசன திட்டத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் ஏனைய நீர்விநியோக நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் குறித்த புணர்மைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் புனரமைப்பு பணிகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நிறைவுறுத்தப்பட உள்ளதாகவும் நீர்பாசனத் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
