அம்பாறை மாவட்டத்தில் தகுதி பெற்ற வாக்காளர்கள்: அரசாங்க அதிபர் வெளிப்படுத்திய தகவல்
ஜனாதிபதித் தேர்தலுக்காக அம்பாறை மாவட்டத்தில் 555,432 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக அம்பாறை மாவட்ட செயலகத்தில் நேற்று (19.09.2024) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தேர்தல் தினத்தில் நடந்துகொள்ளவேண்டிய முறைமைகள் தொடர்பாக வேட்பாளர்களின் முகவர்கள், பொலிஸார், தேர்தல் கண்காணிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட ஏனைய தரப்புக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
வாக்களிப்பு நிலையங்கள்
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அடிப்படை ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளது. அம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்ப வளாகத்தில் வாக்கு எண்ணும் பணி நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், அம்பாறை மாவட்டத்தில் 184 அம்பாறை வாக்களிப்பு நிலையங்கள், 93 சம்மாந்துறை வாக்களிப்பு நிலையங்கள், 74 கல்முனை வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் 177 பொத்துவில் வாக்களிப்பு நிலையங்கள் உட்பட 528 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன.
தேர்தலில் விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கான
ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
வாக்குச்சீட்டு
இதேவேளை, வாக்காளர்கள் அனைவரும் உரிய நேரத்திற்கு வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்குமாறும், இறுதிநேரம் வரை காத்திருக்காது வாக்குரிமையை பயன்படுத்துமாறும் இதன்போது அவர் தெரிவித்துள்ளார்.
வாக்களிப்பு நிலையத்தில் செப்டம்பர் 21ஆம் திகதி காலை 07 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பிக்கப்படும். பிற்பகல் 04 மணிக்கு வாக்களிப்பு நிலைய வரிசையில் தரித்து நிற்கின்ற வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேவேளை, பிற்பகல் 04 மணிக்கு பின்னர் வாக்களிப்பு நிலையத்தினுள் உட்பிரவேசிக்க முடியாது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |