மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதுடன் மாவட்டத்தில் 4இலட்சத்து 69ஆயிரத்து 686 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நேற்று (19.09.2024) நடைபெற்ற தேர்தல் தொடர்பான விசேட கூட்டத்தின் பின்னர் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாளைய தினம் காலை 07 மணி தொடக்கம் வாக்குப்பெட்டிகள் விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என அவர் கூறியுள்ளார்.
விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான தேர்தல் அலுவலகமாக மட்டக்களப்பு இந்துக்கல்லூரி நிறுவப்பட்டுள்ளதுடன் அங்கிருந்தே தேர்தல் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்வோர் கையடக்க தொலைபேசிகளை கொண்டுசெல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எச்.எம்.சுபியான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |