அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல்! பொதுமக்களுடன் குறிக்கட்டுவானில் காத்திருந்த வெளிநாட்டவர்கள்(Photos)

Jaffna Douglas Devananda S. Sritharan Sri Lanka
By Theepan Jul 14, 2023 10:42 AM GMT
Report

 நெடுந்தீவின் பிரதான போக்குவரத்து மார்க்கமான வடதாரகை பயணிகள் படகு நேர ஒழுங்கு இன்றைய தினம் தீடீரென மாற்றப்பட்டதால் பொதுமக்கள் பலரும் பாதிப்படைந்தனர்.

நெடுந்தீவு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (14)நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் இடம்பெறுகின்ற நிலையில், கூட்டத்தில் பங்கேற்பவர்களின் வசதிக்கேற்ப வடதாரகை பொது போக்குவரத்து நேர ஒழுங்கு மாற்றப்பட்டமையால் நெடுந்தீவுக்கு செல்வதற்காக வழமையான நேரத்திற்கு குறிக்கட்டுவான் வந்த பொதுமக்கள் பலரும் பாதிப்படைந்தனர்.

அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல்! பொதுமக்களுடன் குறிக்கட்டுவானில் காத்திருந்த வெளிநாட்டவர்கள்(Photos) | Regional Development Committee Meeting Neduntheevu  

இதன்போது நெடுந்தீவுக்கு செல்லவிருந்த மக்கள், வயோதிபர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எனப் பலரும் பாதிப்படைந்து விசனம் தெரிவித்தனர்.

குறிக்கட்டுவானிலிருந்து நெடுந்தீவு நோக்கி காலை 8 மணிக்கு பயணமாகும் வடதாரகை பயணிகள் படகு இன்றையதினம் நெடுந்தீவிலிருந்து குறிக்கட்டுவான் நோக்கி காலை 6.30 மணிக்கும் குறிக்கட்டுவானிலிருந்து நெடுந்தீவு நோக்கி காலை 7.30 மணிக்கும் சேவையில் ஈடுபட்டது.

அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல்! பொதுமக்களுடன் குறிக்கட்டுவானில் காத்திருந்த வெளிநாட்டவர்கள்(Photos) | Regional Development Committee Meeting Neduntheevu

அரச அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் என பலரும் வடதாரகை படகில் பயணத்தை மேற்கொண்ட நிலையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்படையினரின் விசேட படகில் பயணித்தார்.

வழமையான பயண நேரமான 8 மணிக்கு வடதாரகை பயணிகள் படகில் பயணிக்க வந்தவர்கள் நீண்ட நேரம் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

இதன்போது அங்கு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினரொருவர், பொதுமக்களை நடுத்தெருவில் அந்தரிக்க வைத்துவிட்டு யாருக்கு இவர்கள் கூட்டம் நடத்துகிறார்கள் என கேள்வி எழுப்பினார்.

அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல்! பொதுமக்களுடன் குறிக்கட்டுவானில் காத்திருந்த வெளிநாட்டவர்கள்(Photos) | Regional Development Committee Meeting Neduntheevu

சுற்றுலா தலமான நெடுந்தீவுக்கு செல்வதற்காக வந்த நிலையில் போக்குவரத்து இல்லாமை கவலையளிப்பதாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிலர் கருத்து தெரிவித்தனர்.

பொறுப்பானவர்களின் பொறுப்பற்றதனத்தால் வயோதிபர்கள், முதியவர்கள் என பலரும் ஏமாற்றத்துடன் காத்ததிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US