மறைந்த லதா வல்பொலவின் இறுதிக்கிரியைகள் தொடர்பில் வெளியான தகவல்
மறைந்த சிங்களத் திரையிசையின் 'குயில் என அறியப்படும் லதா வல்பொலவின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அன்னாரது உடல் இன்று(28.12.2025) பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணிவரை கொழும்பில் உள்ள தனியார் மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்படுகின்றது.
பின்னர் சுதந்திர சதுக்க வளாகத்தில் அன்னாரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டதன் பின்னர், பொரளை பொதுமயானத்தில் இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல சிங்கள பாடகி
சுகவீனம் காரணமாக ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தமது 91 வது வயதில் லதா வல்பொல நேற்று (27.12.2025) காலமானார்.

1934 ஆம் ஆண்டு கல்கிசையில் பிறந்த லதா வல்பொல, 1946 ஆம் ஆண்டு தனது 12 ஆவது வயதில் அன்றைய 'ரேடியோ சிலோன்' வானொலியில் தமது முதல் பாடலைப் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜேர்மனியில் தொழிற்சாலைகள் மூடப்படுவதால் மற்றொரு ஐரோப்பிய நாட்டிற்க்கு அதிகரிக்கும் வணிக வாய்ப்புகள் News Lankasri
கட்டுப்பாடு விதித்த ஐரோப்பா... எரிவாயு ஏற்றுமதியை இந்த நாடுகளுக்கு இருமடங்காக அதிகரித்த ரஷ்யா News Lankasri