தலிபான்களின் இடைக்கால அமைச்சரவையை அங்கீகரிக்க இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதர் மறுப்பு
தலிபான்களின் இடைக்கால அமைச்சரவையை அங்கீகரிக்க இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதர் மறுத்துள்ளார்.
தூதுவர், அஷ்ரப் ஹைதாரி, தலிபான் அரசாங்கம் சட்டவிரோதமானது என்று இலங்கை அரசாங்கம் மற்றும் கொழும்பில் உள்ள இராஜதந்திர சமூகத்திற்கு, கடிதம் ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்.
இந்த வாரம் இடைக்கால அமைச்சரவை மற்றும் பிரதமரை நியமிப்பதாக தலிபான் அறிவித்திருந்தது.
இந்தநிலையில், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் தூதர்கள் எவரும், தலிபான்களின் இடைக்கால அமைச்சரவையை வரவேற்கவில்லை என்று ஹைதாரி கொழும்பின் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
தலிபான் அமைச்சரவை, அங்கீகரிக்கப்படாத பயங்கரவாதிகளை அதன் தலைவர்களாக உள்ளடக்கியுள்ளது.
அத்துடன் பெண்கள் மற்றும் அனைத்து இன, மத மற்றும் மத சிறுபான்மையினரையும் இணைத்துக்கொள்ளவில்லை.
இதேவேளை உலகெங்கிலும் உள்ள அனைத்து ஆப்கானிஸ்தான் தூதரகங்களும் தங்கள் வழக்கமான கடமைகளைத் தொடரும் என ஹைதாரி கூறியுள்ளார்.

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
