சமத்துவச்சட்டத்தை இரத்து செய்யும் திட்டம் அதிர்ச்சியளிக்கிறது : பிரித்தானிய பிரதமர் கண்டனம்
பிரித்தானியாவின் அடிப்படை விழுமியங்களில் ஒன்றான சமத்துவச் சட்டத்தை (Equality Act 2010) ரத்து செய்யப்போவதாக 'ரிபோர்ம் யுகே' (Reform UK) கட்சி அறிவித்துள்ளமைக்கு பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிபிசி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இது குறித்து பேசிய அவர்,
பல தசாப்தங்களாகப் பெண்கள் மற்றும் அனைத்து இனத்தைச் சேர்ந்தவர்களும் சமமாக நடத்தப்படுவதை இந்தச் சட்டமே உறுதி செய்து வருவதாகவும், இதனை ரத்து செய்ய நினைப்பது மிகவும் அதிர்ச்சியளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியா பன்முகத்தன்மை
சகிப்புத்தன்மை, இரக்கம் மற்றும் பன்முகத்தன்மை ஆகியவை பிரித்தானிய அடையாளத்தின் முக்கிய அம்சங்கள் என்றும், ரிபோர்ம் யுகே-வின் இந்தத் திட்டம் அந்த அடையாளத்தையே சிதைப்பதாக அமையும் என்றும் அவர் சாடினார்.

முன்னதாக, கன்சர்வேடிவ் கட்சியிலிருந்து விலகி சமீபத்தில் 'ரிபோர்ம் யுகே' கட்சியில் இணைந்த முன்னாள் உள்துறை அமைச்சர் சுவெல்லா பிராவர்மேன், பிரித்தானியா பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கம் என்ற கொள்கைகளால் பிளவுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனால் தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் சமத்துவச் சட்டத்தை ரத்து செய்யும் என்று அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தச் சட்டமானது வயது, இனம், மதம் மற்றும் இயலாமை உள்ளிட்ட 9 காரணங்களின் அடிப்படையில் மக்கள் பாகுபடுத்தப்படுவதைத் தடுக்கிறது.
எனினும், கடந்த சில ஆண்டுகளில் பணிநிலை தீர்ப்பாயங்களில் பாகுபாடு தொடர்பான முறைபாடுகள் அதிகரித்து வரும் நிலையில், ஏற்கனவே உள்ள சட்டப் பாதுகாப்புகளை நீக்குவது சிறுபான்மையினர் மற்றும் விசேட தேவையுடைய ஓரினச் உரிமைகளை நிலைகுலையச் செய்யும் என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
[6EYLOAH ]
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri