புதிய நாடாளுமன்றில் அநுர மேற்கொள்ளவுள்ள முக்கிய நடவடிக்கை
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு வாரத்தில் நிதியமைச்சர் என்ற வகையில் அரசு சேவைகளுகக்ன கணக்கு மீதான வாக்கெடுப்பை சமர்ப்பிக்கவுள்ளார்.
அடுத்த ஏப்ரல் வரை நான்கு மாதங்களுக்கான அரசு சேவைகள் தொடர்வதை இந்த வாக்கெடுப்பு உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் பிறகு 2025 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தை அரசாங்கம் தாக்கல் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திறைசேரி அதிகாரி
இந்தநிலையில் நிதி அமைச்சகம் கணக்கு வாக்கெடுப்பை தொகுத்து வருவதாக என்று திறைசேரி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
புதிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தவுடன் அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய நாடாளுமன்றம் நவம்பர் 21 ஆம் திகதி முதல் முறையாக கூடவுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு சம்பளம்
இந்த நிலையில் அடுத்த நான்கு மாதங்களுக்காக, அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை கிறிஸ்மஸக்கு முன்பாக நாடாளுமன்றத்தில் விவாதித்து நிறைவேற்ற வேண்டும் என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.
எனினும் கணக்கு வாக்கெடுப்பு, பொது ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |