லெபனான் களமுனைக்கு நெதன்யாகு திடீர் விஜயம்
தெற்கு லெபனானில் தமது தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) எல்லைப்பகுதிக்கு விஜயம் செய்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெஞ்சமின் நெதன்யாகு இன்று(03.11.2024) அதிகாலை லெபனான் எல்லைக்கு விஜயம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இஸ்ரேலிய பிரதமர் அலுவலக அறிக்கையை மேற்கோள்காட்டியே குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இரண்டாவது விஜயம்
மேலும் இந்த விஜயமானது ஒரு மாதத்திற்குள் முன்னெடுக்கப்பட்ட இரண்டாவது விஜயம் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,986 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், ஒக்டோபர் 2023 முதல் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 13,402 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
18 பேர் பலி
இதன்படி கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 83 பேர் காயமடைந்ததாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் 772 பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றும் அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |