றீச்சாவிடமிருந்து மற்றுமொரு அறிவிப்பு: 40 பேருக்கு கிடைக்கும் சந்தர்ப்பம்
றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையில் பாதுகாப்பு உத்தியோகத்தர் பணிகளுக்கான வெற்றிடம் நிலவும் நிலையில் அந்த வெற்றிடங்களுக்காக விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
பிரம்மாண்ட சுற்றுலா அம்சங்களைக் கொண்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல வசதிகளுடன் அமைந்துள்ளது கிளிநொச்சி, இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை (ReeCha Organic Farm).
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஓர் சுற்றுலாதலமாக இது காணப்படுகிறது.
விபரம்
இந்த நிலையிலேயே, 30 தொடக்கம் 40 வரையிலான பாதுகாப்பு அதிகாரிகள் தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 25 தொடக்கம் 40 வயது கொண்டவர்கள் இந்த பணிக்காக விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணி தொடர்பான நேர்முகத் தேர்வு செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் நடத்தப்படும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
மேலும், குறித்த வெற்றிடங்களுக்கு தகமையானவர்கள் 070 777 2351 என்ற வட்ஸ் இலக்கத்திற்கு தமது சுயவிபரக் கோவையை அனுப்பி வைக்க முடியும்.


பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam
