தமிழர் பகுதியில் முதல்முறையாக றீச்சாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அம்சம்
கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா(Reecha) ஒருங்கிணைந்த பண்ணை பிரம்மாண்ட சுற்றுலா அம்சங்களைக் கொண்டுள்ளது.
அத்துடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல வசதிகளுடனும் இந்த ஒருங்கிணைந்த பண்ணை அமைந்துள்ளது.
பொழுதுபோக்கு மையமாக கருதப்படும் றீ(ச்)ஷா (Reecha) பண்ணையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தமது பொழுதை களிக்க பல புதிய விடயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், சுற்றுலாப் பயணிகளை மேலும் கவரும் நோக்கில் புதிய பொழுதுபோக்கு அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழர் பகுதியில் முதல் தடவையாக றீ(ச்)ஷா (Reecha) சுற்றுலாத் தளத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியில் திளைக்க புதிய ரங்கராட்டின பொழுதுபோக்கு அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பொழுதுபோக்கு அம்சம் சுற்றுலாப் பயணிகளுக்காக இன்று(18) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri
ஜீ தமிழில் ஒளிபரப்பாக போகும் கில்லாடி ஜோடிஸ் நடன நிகழ்ச்சி... யார் யார் போட்டியாளர்கள், வீடியோ இதோ Cineulagam