பாடசாலை புத்தகப் பைகள் மற்றும் காலணிகளின் விலை குறைப்பு
பாடசாலை புத்தகப் பைகள் மற்றும் காலணிகள் என்பவற்றின் விலைகள் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
அத்துடன், பாடசாலை புத்தகப் பைகள் மற்றும் காலணிகள் என்பவற்றின் விலை 10 வீதத்தால் குறைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.
இன்று (27.07.22) நிதி அமைச்சில் பாடசாலை புத்தகப் பை மற்றும் காலணி உற்பத்தியாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.
விலை 10 வீதத்தால் குறைப்பு
பாடசாலை புத்தகப் பைகள் மற்றும் காலணிகள் என்பவற்றின் விலை 10 வீதத்தால் குறைக்க உற்பத்தியாளர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சந்தையில் இருக்கும் புத்தக பைகள் மற்றும் காலணிகளின் கையிருப்புகளை திருத்தப்பட்ட விலையில் வழங்க உள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
