அப்பியாசக் கொப்பிகளின் விலைகள் குறைப்பு
வரவு செலவுத்திட்டத்தின் மூலம் வரிக்குறைப்பு செய்யப்பட்டதன் விளைவாக, டிசம்பர் 01 முதல் அப்பியாசக் கொப்பிகளின் விலைகள் 18வீதம் குறைக்கப்படும் என்று தேசிய புத்தக வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.
சங்கத்தின் தலைவர் காமினி மொரகொட, கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 1ஆம் திகதி முதல்
பாடப் புத்தகங்கள் மீது விதிக்கப்பட்ட 18வீத மதிப்புக்கூட்டு வரி (VAT) நீக்கப்படும் என்று 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தபோது ஜனாதிபதி கூறியதை அவர் பெரிதும் பாராட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த முடிவு எப்போது செயல்படுத்தப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், டிசம்பர் 1ஆம் திகதி முதல் அப்பியாசக் கொப்பிகள் உட்பட புத்தகங்களின் விலைகளை 18வீதம் குறைக்கத் தனது சங்கம் முடிவு செய்துள்ளதாக தேசிய புத்தக வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
இன்னும் எளிமையாகச் சொல்வதானால், 10,000ரூபா மதிப்புள்ள புத்தகங்களைக் கொள்வனவு செய்யும் போது .இதன் மூலம் ஏறக்குறைய 2,000ரூபா குறைக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.