மதுபானங்களின் விலை குறைப்பு: ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை - செய்திகளின் தொகுப்பு
இந்த ஆண்டு சித்திரை புத்தாண்டை மகிழ்வுடன் கொண்டாட மதுபானங்களின் விலைகளை குறைக்க வேண்டும் என கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(21) இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்துழைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் கூறுகையில்,பொருளாதார பாதிப்பு காரணமாக நாட்டு மக்கள் கடந்த மூன்றாண்டு காலமாக நிம்மதியாக இல்லை.மகிழ்ச்சியுடன் பண்டிகைகளை புத்தாண்டை கொண்டாடவுமில்லை.மதுபானங்களின் விலை அதிகரிக்கப்பட்டதால் சட்டவிரோத மதுபான உற்பத்திகள் அதிகரித்துள்ளன.
எனவே இந்த ஆண்டு சித்திரை புத்தாண்டை மகிழ்வுடன் கொண்டாட மதுபானங்களின் விலைகளை குறைக்க வேண்டும் என்ற பணிவான கோரிக்கையை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும்” என்றார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |