மதுபான விலை குறைப்பு தொடர்பில் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு
மதுபானத்தின் விலையை குறைக்கும் வகையில் கலால் வரி குறைக்கப்படும் என்ற செய்தி முற்றிலும் தவறானது என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவ்வாறான திருத்தம் தொடர்பில் தமது திணைக்களத்திற்கு எவ்வித தகவலும் அல்லது அறிவுறுத்தல்களும் வழங்கப்படவில்லை என திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபானத்தின் விலை
ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க அண்மையில் பதுளை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது எதிர்வரும் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் மதுபானத்தின் விலையை குறைக்க முயற்சிப்பதாக தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், மதுவரி விகிதங்கள் அல்லது மதுபானங்களின் விலை குறைக்கப்பட மாட்டாது என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிடிப்பட்ட ரித்தீஷ்.. குத்தாட்டம் போட்ட செல்வி மகன்- காதல் தோல்விக்கு கம்பெனி கொடுத்த அம்மா Manithan

ஸ்ருதியிடம் கேள்வி கேட்கப்போய் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

மிக நெருக்கடியான சூழலில் முதல் தொலைபேசி அழைப்பு... புடின் - மேக்ரான் விவாதித்த விடயங்கள் News Lankasri
