இலங்கையின் 8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு! வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்
நாட்டின் 8 மாவட்டங்களுக்கு கடுமையான சிவப்பு மின்னல் எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது .
இன்று (12) மதியம் வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பு இரவு 11:00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
07 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை
இந்த காலகட்டத்தில், 08 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 07 மாவட்டங்களுக்கு அம்பர் (தயாராக இருங்கள்) எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மேற்கு, சபரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களுக்கு இன்று கடுமையான மின்னல் எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.மின்னலால் ஏற்படும் சேதத்தைக் குறைக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.