செங்கடலில் இலங்கையர்கள் உட்பட வெளிநாட்டவர்களுடன் பயணித்த கப்பல் தாக்கி அழிப்பு
செங்கடலில் மேற்குலக நாடுகளின் சரக்கு கப்பல்கள் மீது ஹவுத்தி தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கை, இந்தியா உட்பட வெளிநாட்டு பணியாளர்களுடன் பயணித்த கப்பல் மீது தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
23 பணியாளர்களுடன் பயணித்த பார்படோஸ் கொடி பறக்கவிடப்பட்ட MV True Confidence என்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், கப்பல் கடலில் மூழ்கியுள்ளது.
தீவிரவாதிகள் தாக்குதல்
தீவிரவாதிகளின் தாக்குதலால் கப்பல் தீப்பற்றியுள்ளது. குறைந்தது இரண்டு பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் ஆறு பேர் வரை தீக்காயங்களுக்கு உள்ளாகினர் எனவும் அமெரிக்க மற்றும் பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 15, பேர், நான்கு வியட்நாமியர்கள், இரண்டு இலங்கையர்கள், ஒர் இந்தியர், மற்றும் நேபாளம் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உட்பட்ட 23 பணியாளர்கள் அந்தக் கப்பலில் பயணித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan