இரத்மலானையில் சிவப்பு நிறமாக மாறிய கால்வாய்
இரத்மலானை, படோவிட்ட பிரதேசத்தில் உள்ள கால்வாய் ஒன்று, இன்று காலை திடீரென இரத்த சிவப்பு நிறமாக மாறியுள்ளது.
எனினும், இது தொடர்பில் ஆராயப்பட்டபோது, நீரில் கைத்தொழில் சாயம் கலப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் அச்சமடைய வேண்டாம் என மத்திய சுற்றாடல் அதிகாரசபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேல் மாகாண அலுவலகப் பிரதிநிதிகள் நீர் சிவப்பு நிறமாக மாறியதற்கான காரணத்தைக் கண்டறியும் சோதனையை மேற்கொண்டதுடன், தண்ணீரில் தொழிற்சாலைச் சாயம் வெளியிடப்பட்டதை கண்டறிந்தனர்.
சாயம்
இருப்பினும், 'PH' சோதனையின்படி தண்ணீரில் கலந்த ரசாயனம் ஆபத்தானது அல்ல என்று முதற்கட்ட சோதனையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, நேற்று பெய்த கனமழையின் போது அந்தப்பகுதியை சேர்ந்த ஒருவர் தனது வீட்டு வளாகத்தில் சேமித்து வைத்திருந்த சாயம் கால்வாயில் அடித்து செல்லப்பட்டமை தெரியவந்தது.
இதன் காரணமாக, இரத்மலானையைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக இணைப்புக் கால்வாய்கள் சிவப்பு நிறமாக மாறக்கூடும்.
என்பதால், இரத்மலானையில் வசிக்கும் மக்களை அச்சமடைய வேண்டாம் என்று மத்திய சுற்றாடல் அதிகாரசபை கேட்டுக் கொண்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |