இலங்கையின் 16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
இலங்கையின் 16 மாவட்டங்களுக்கு கடுமையான காற்று குறித்து சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை நிலவுவதால் பலத்த காற்று வீசக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக, மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவு, வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணம், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில், மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மன்னார், வவுனியா, திருகோணமலை, அனுராதபுரம் , புத்தளம், குருநாகல், கேகாலை, கண்டி, நுவர-எலிய, இரத்தினபுரி, காலி, மாத்தறை உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு , வானிலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
