நாட்டின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
இலங்கையில் இன்று ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று(4.9.2026) இரவு 11:00 மணி வரை நடைமுறையில் இருக்கும் வகையில், ஆபத்தை உணர்த்தும் வகையில் 10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 15 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் குறிப்பிடப்பட்ட ஊவா, மத்திய, கிழக்கு மாகாணங்கள் மற்றும் பொலன்னறுவை முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் பல இடங்களில் பலத்த இடியுடன் கூடிய மழையும், அத்துடன் கடுமையான மின்னல் தாக்கமும் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சமயங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, மின்னல் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்கள் மற்றும் சேதங்களைக் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் - எதிர்வாதத்துக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக சட்டத்தரணிகள் குற்றச்சாட்டு
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 19 Evening