இலங்கைக்கு கடத்த இருந்த கடல் அட்டைகள் மீட்பு!(Photo)
இலங்கைக்கு கடத்துவதற்காக பிடித்து வரப்பட்ட கடல் அட்டைகள் நேற்று(2) மாலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் வடக்கு கடற்கரை பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும பொலிஸார் ரோந்து சென்றபோது சந்தேகத்திற்கிடமாக நின்ற காரை சோதனை செய்துள்ளனர்.
இதன்போது கடத்தி செல்ல ஆயத்தமாக இருந்த 21 மூட்டைகளில் பொதி செய்யப்பட்ட சுமார் 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இது தொடர்பாக தேவிபட்டினத்தை சேர்ந்த ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்த விசாரணையில் இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக கடல் அட்டைகள் பிடித்து வரப்பட்டதாக தெரியவந்துள்ளது.
ராமநாதபுரத்தில் உள்ள வனத்துறையினரிடம் குறித்த கடல் அட்டைகளை ஒப்படைக்கப்பட்டுள்ளன. வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
