மட்டக்களப்பில் பொலித்தீன் பையில் சுற்றிவைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு
மட்டக்களப்பு - சந்திவெளி பகுதியில் முந்திரி தோட்டம் ஒன்றின் மரத்தின் கீழ் பாதுகாப்பாக பொலித்தீன் பையில் சுற்றிவைக்கப்பட்டிருந்த துப்பாக்கியொன்று, ரவைகள் மற்றும் மகசீன் என்பன மீட்கப்பட்டுள்ளன.
குறித்த ஆயுதங்கள் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தெரிவித்துள்ளார்.
பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய மட்டக்களப்பு விசேட புலனாய்வு பிரிவு பொறுபதிகாரி மற்றும் மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டாரா தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவை மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது ரி 81 ரக துப்பாக்கி, 2 மகசீன்கள், 49 ரவைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் முந்திரி தோட்ட உரிமையாளரில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri