கேகாலையில் மண்சரிவில் சிக்குண்ட இருவர் சடலங்களாக மீட்பு
கேகாலை கலிகமுவ - ஹத்னாகொட பகுதியில் இன்று காலை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி காணாமல்போயிருந்த தந்தை, மகன் ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை அறிவித்துள்ளது.
குறித்த மண்சரிவில் வீடொன்று சிக்கியதில், அவ்வீட்டில் வசித்துவந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோர் காணாமல் போயிருந்தனர்.
இந்நிலையில், அவர்களில் தாய் மாத்திரம் இன்று காலை உயிருடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையையடுத்து, தந்தை மற்றும் மகன் ஆகியோரின் சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன.
70 வயதான எம்.பி. ஆர்.ரணசிங்க மற்றும் 32 வயதான எம்.பி.ஆர்.தமித் குமார ரணசிங்க என்ற தந்தையும் மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

பதினாறாவது மே பதினெட்டு 19 மணி நேரம் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
