ஊர்காவற்துறை கடலில் நபர் ஒருவரின் சடலம் மீட்பு
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் உள்ள கடலிலிருந்து நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சுருவில் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட குறித்த நபர் கடந்த 1998ஆம் ஆண்டு காணிகளை விற்றுவிட்டு பருத்தித்துறையில் குடியேறியுள்ளனர்.
அதன்பின்னர் அங்கு வாழ்ந்துவந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியாமல் தனது நண்பர்களைச் சந்திப்பதற்காக சுருவிவில் பகுதிக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றையதினம் அவர் கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் காலில் சுகயீனம் உள்ளவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
செல்லத்துரை விமலகுமார் (வயது 64) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவனது சடலமானது பிரேதப் பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில்
வைக்கப்பட்டுள்ளது.





கரூரில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு - முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு News Lankasri
