தூக்கில் தொங்கிய நிலையில் மூன்று பிள்ளைகளின் தாயொருவர் சடலமாக மீட்பு
ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்தாவ பகுதியில் மூன்று பிள்ளைகளின் தாயொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்டவர் ஹொரவ்பொத்தானை-கரடிக்குளம்,கல்கந்தாவ பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான ஹனீபா நுஸ்ரினா (24 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் குருநாகல் பகுதியைச் சேர்ந்த ஒருவரை திருமணம் முடித்து தமது சொந்த ஊரான கல்கந்தாவ பகுதியில் வசித்து வந்ததாகவும் கடந்த சில நாட்களாக குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த பெண்ணின் சடலம் தற்போது சம்பவ இடத்தில் இருப்பதாகவும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam