இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கடல் அட்டைகள் மீட்பு
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கடல் அட்டைகளை தமிழக கரையோர பொலிஸார் மீட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையானது நேற்றைய தினம் (20.05.2023) இடம்பெற்றுள்ளது.
இதன் போது இந்தியா - இராமேஸ்வரத்தில் ஒருவரது வீட்டிலிருந்து 550 கடல் அட்டைகள் மீட்க்கப்பட்டுள்ளது.
வழக்கு தாக்கல்
இதேவேளை வீட்டின் உரிமையாளர் தப்பிச்சென்ற போது குறித்த நபர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகளில் சட்டவிரோத படகுகள் மூலம் இலங்கைக்கு கடல் அட்டைகளை கடத்தும் பெரும் குழுக்கள் செயற்பட்டு வருகின்றன.
அத்துடன் கடல் அட்டைகள் கடத்தல்காரர்களால் பிடிக்கப்பட்ட பின்னர் உலர்த்தப்பட்டு இலங்கையின் ஊடாக தூர கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன.
மேலும், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட தூர கிழக்கு நாடுகளில் கடல் அட்டைகள் முக்கிய உணவாக பயன்படுகின்றனமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |